< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ராயக்கோட்டை அருகேமண் கடத்திய 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
|8 May 2023 12:30 AM IST
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே கடுக்கனஅள்ளி ஊராட்சி கினியன்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளை கண்டதும் 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை விட்டுட்டு டிரைவர்கள் தப்பியோடினர். இதையடுத்து லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திர டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகிறார்.