< Back
மாநில செய்திகள்
கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
17 April 2023 12:30 AM IST

சூளகிரி:

மாரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மற்றும் அதிகாரிகள் சாமனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் 5 யூனிட் கற்கள் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியைபறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்