< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
|15 April 2023 12:30 AM IST
ஓசூர்:
திருச்சி கனிம வள பிரிவு மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கேட்பாரற்று நின்ற ஒரு லாரியை சோதனை செய்தபோது அதில் கடத்தி வரப்பட்ட 3 யூனிட் எம்.சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.