< Back
மாநில செய்திகள்
கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
9 April 2023 12:00 AM IST

கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி, கந்திகுப்பம் பகுதிகளில் கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் போலீசார் மற்றும் கனிமவள துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி என்னேகொல் புதூர் மற்றும் பசவண்ண கோவில் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி தலா 2 யூனிட் கற்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி உரிமையாளர்கள், டிரைவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்