நாமக்கல்
வெண்ணந்தூர் அருகேகிராவல் மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்
|வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே நெ.3.கொமாரபாளையம் கிராமம் அண்ணாமலைப்பட்டி பகுதியில் சிலர் லாரிகளில் கிராவல் மண் கடத்தி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் இடையே தகவல் பரவியது. இதையடுத்து கடத்தல் லாரியை பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பா.ஜ.க.வினர் நேற்று பா.ஜ.க. ஒன்றிய தலைவர் அருள் தலைமையில் ஆட்டையாம்பட்டி- மல்லூர் நெடுஞ்சாலையில் நெ.3. கொமாரபாளையம் உயர்நிலைப்பள்ளி அருகே திரண்டனர்.
அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பா.ஜ.க.வினர் டிரைவரிடம் கிராவல் மண் குறித்து உரிய ஆவணம் கேட்ட சமயத்தில் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.