< Back
மாநில செய்திகள்
10 லாரி, 2 பொக்லைன் எந்திரம் பறிமுதல்
திருப்பூர்
மாநில செய்திகள்

10 லாரி, 2 பொக்லைன் எந்திரம் பறிமுதல்

தினத்தந்தி
|
27 Aug 2022 11:24 PM IST

தாராபுரத்தில் அரசு அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தலில் ஈடுபட்ட 10 டிப்பர் லாரிகள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தாராபுரத்தில் அரசு அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தலில் ஈடுபட்ட 10 டிப்பர் லாரிகள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

லாரிகள் மண்கடத்தல்

தாராபுரத்தில் கடந்த 2 மாத காலமாக தாராபுரம் தாலுகாவை சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகளில் தனியார் மற்றும் புறம்போக்கு நிலங்களில் களிமண் மற்றும் செம்மண்ணை அனுமதியின்றி கடத்தி வந்தனர்.நிலையில் நேற்று காலையில் அமராவதி ஆற்று அருகே உள்ள வயல்வெளிகளில் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் நிரப்பும் பணி நடைபெற்று கொண்டிருந்தன.

3 பேர் வாக்குவாதம்

இதுகுறித்து தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசனுக்கு போன் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ உத்தரவின்பேரில் தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி தலைமையில், வருவாய் ஆய்வாளர் அருணாசலம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் நிரப்பி கொண்டு இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினரை கண்டதும் லாரி டிரைவர்கள் தப்பி ஓடினர். அப்போது மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எழில்குமார், சையதுபாஷா மற்றும் பிரசாத் ஆகிய 3 பேர் வருவாய் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

12 வாகனங்கள் பறிமுதல்

இதில் ஆத்திரம் அடைந்த வருவாய்த்துறையினர் 10 லாரிகள் மற்றும் 2 பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.பின்னர் பிடிபட்ட லாரிகள் குறித்தும் தாசில்தார் ஜெகஜோதி தாராபுரம் போலீசில் அரசு அனுமதியின்றி மண் கடத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்மனு கொடுத்தார்.

புகாரின் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அனுமதி இல்லாமல் களிமண் மற்றும் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 லாரிகள்,2 பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக எழில்குமார், சையதுபாஷா மற்றும் பிரசாத் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்