< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
உத்தனப்பள்ளி அருகே கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
|28 May 2022 10:40 PM IST
உத்தனப்பள்ளி அருகே கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
ராயக்கோட்டை:
கெலமங்கலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் சினிகிரிப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி லாரியில் கிரானைட் கல்லை எடுத்து செல்வது தெரிந்தது. இதனால் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.