< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
1 Sept 2023 12:30 AM IST

தர்மபுரி அருகே உள்ள நடுப்பட்டி மற்றும் அக்கமனஅள்ளி பகுதிகளில் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ஒரு லாரியில் சிலர் செம்மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். அலுவலர்களை பார்த்தவுடன் அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போது உரிய அனுமதியின்றி செம்மண் எடுப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புவியியல் துறை உதவி அலுவலர் லோகநாதன் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் அதில் கடத்தப்பட்ட செம்மண்ணை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்