< Back
மாநில செய்திகள்
பிலிக்கல்பாளையம் அருகே  தோட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி  அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பிலிக்கல்பாளையம் அருகே தோட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
12 Dec 2022 12:15 AM IST

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவருடைய கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கம் காவிரி ஆற்றை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருந்தது.

இதுகுறித்து நில உரிமையாளர் நடராஜ் கூறுகையில் இங்கு பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். அப்போது இது சிவலிங்கம் என்று எனக்கு தெரியாது. இது பாண்டியன் நட்ட கல் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் சிவனடியார் ஒருவர் இது சிவலிங்கம் என கூறினார். சுமார் 8 அடி உயரமுள்ள இந்த சிவலிங்கத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தின் நடுவே இருந்த சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபட ஏதுவாக தோட்டத்தின் வெளியே வைப்பதற்காக சிவலிங்கம் இருந்த பகுதியை தோண்டி பொக்லைன் எந்திரம் மூலம் எடுக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஜோதி மற்றும் போலீசார் தொல்லியல் துறை ஒப்புதல் இல்லாமல் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். பின்னர் அதே இடத்தில் சிவலிங்கம் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்