< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
நெடுந்தூர ஓட்டப்பந்தயம்
|7 Oct 2023 11:10 PM IST
நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் மூலம் மாரத்தான் ஓட்டத்துக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஓட்டப்பந்தயம் தொடங்கியது. இதில் ஏராளமான வாலிபர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஓட்டப்பந்தயத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.