< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறந்தநாளையொட்டி நெடுந்தூர ஓட்டப் போட்டி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

அண்ணா பிறந்தநாளையொட்டி நெடுந்தூர ஓட்டப் போட்டி

தினத்தந்தி
|
8 Oct 2023 12:33 AM IST

ராணிப்பேட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி நெடுந்தூர ஓட்டப் போட்டியை கலெக்டர் வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் ராணிப்பேட்டையில் நெடுந்தூர ஓட்ட போட்டி நேற்று நடந்தது.

இதனை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து கலெக்டர் வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 8 கி.மீ தூரமும், பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்டவர் ஆண்கள் பிரிவிற்கு 10கி.மீ. தூரமும் பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ. தூரமும் என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஒடினர்.

போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு முறையே ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2000 ஆயிரம் ரொக்கமும், 4 முதல் 10-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1000-மும் ரொக்கப்பரிசாக பாராட்டு சான்றிதழ்களுடன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ஞானசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்