< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்
|25 April 2024 6:37 AM IST
நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை வள்ளியூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள், கோவில் அருகேயுள்ள இடத்தில் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த மூன்று பேர், காதலர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன், பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து, போலீசில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், வள்ளியூரைச் சேர்ந்த கலையரசன், குட்டி மற்றும் கண்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி என்றும் அவர் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.