< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் லண்டன் விமானம் 4½ மணி நேரம் தாமதம்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் லண்டன் விமானம் 4½ மணி நேரம் தாமதம்

தினத்தந்தி
|
16 Nov 2023 5:19 AM IST

விமானத்தில் பயணம் செய்ய வந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஏற்கனவே செல்போன்களில் குறுஞ்செய்தி மூலமாக விமானம் தாமதம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு லண்டனில் இருந்து தினமும் அதிகாலை 5:35 மணிக்கு வரும் விமானம், மீண்டும் காலை 7:45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானம் சென்னை லண்டன் இடையே நேரடி விமானம் என்பதாலும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு இணைப்பு விமானம் என்பதாலும் இந்த விமானத்தில் எப்போதுமே, பயணிகள் கூட்டம் நிறைந்து வழியும்.

இந்த நிலையில் லண்டனில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு 4½ மணி நேரம் தாமதமாக நேற்று காலை 10.20 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. மீண்டும் பகல் 12 மணிக்கு 4½ மணி நேரம் தாமதமாக லண்டன் புறப்பட்டு சென்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஏற்கனவே செல்போன்களில் குறுஞ்செய்தி மூலமாக விமானம் தாமதம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தகவல் கிடைக்காத பயணிகள் சிலர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்து அவதிக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்