< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மக்களவை தேர்தல்; கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்
|9 March 2024 8:13 AM IST
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை,
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட கூட்டணி விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் நாளை விருப்பமனு பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.
மேலும், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் அமைத்துள்ளார். அந்த குழுவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் , ஆர். தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.