< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தல்.. கரூர் தொகுதி வேட்பாளரை அறிவித்த சீமான்
|29 Aug 2023 5:07 PM IST
கருப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கரூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
கரூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த முறை கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கருப்பையா என்பவரையே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பேன் என்றார். கருப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளையும் முந்திய நாம் தமிழர் கட்சி, முதல் வேட்பாளரை அறிவித்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.