மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
|சென்னையில் 2 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை,
நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன், வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பிவைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் நாளை 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னையில் 2 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களிலும் 1,500 துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.