திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் 'லோக் அதாலத்'
|திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் ‘லோக் அதாலத்’ வருகின்ற 9-ந் தேதி நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு மற்றும் அம்பத்தூர், பூந்தமல்லி, திருவொற்றியூர், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய தாலுகா கோர்ட்டுகளிலும் 9-ந் தேதி லோக் அதாலத் நடைபெறுகிறது.
லோக் அதாலத் மூலம் முடித்துவைக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. குற்றவியல், காசோலை, வங்கி கடன், கல்விக்கடன், வாகன விபத்து, விவாகரத்து, தொழிலாளர் நலன், உரிமையியல், சொத்து பிரச்சினை உள்ளிட்ட வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவர்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.