விருதுநகர்
ஸ்கேன் மையத்தில் கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதி
|ஸ்கேன் மையத்தில் கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகரில் மாவட்ட ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் புதிய கட்டிடம் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் எக்கோ எடுக்கும் மையங்கள் தரைதளத்தில் உள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த மையங்களுக்கு வந்து ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் எக்கோ எடுத்து மருத்துவ அறிக்கை பெற்று செல்லும் நிலை உள்ளது. இந்த ஸ்கேன் மையத்தின் அருகிலேயே வரும் நோயாளிகளுக்கு வசதியாக ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கழிவறைகள் யாவும் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஸ்கேன் மற்றும் எக்கோ மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு உரிய முறையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.