நாகப்பட்டினம்
இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
|நாகை மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் நாகை (வடக்கு) உதவி செயற்பொறியாளர் (பொ) சதிஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கோட்டத்திற்கு உட்பட்ட திட்டச்சேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் இ்டங்களான குத்தாலம், நாட்டார் மங்களம், திட்டச்சேரி, கொந்தகை ஆகிய பகுதிகளுக்கும், செல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான நாகூர், வெளிப்பாளையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சாமந்தான்பேட்டை, பால் பண்ணைச்சேரி, தெத்தி, பங்களா தோட்டம், புதுமனை தெரு, நல்லியான் தோட்டம், நெய்தல் நகர், கடற்கரை முடுக்கு, சாமுதந்தி மரைக்காயர் தெரு ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாகை (தெற்கு) உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய் கிழமை) நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இடங்களான கீழ்வேளூர், ஓர்குடி, புத்தர் மங்கலம், ஒதியத்தூர், கடம்பங்குடி ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.