மயிலாடுதுறை
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
|சீர்காழி, பொறையாறு சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகர் பகுதி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் உயர்அழுத்த மின் பாதையில் கூட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சபரி நகர், தென்பாதி, அரசு ஆஸ்பத்திரி சாலை ரோடு, டி.பி ரோடு, புதிய பஸ் நிலையம், தேர் கீழ வீதி, மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, பிடாரி கீழ வீதி, பிடாரி மேல வீதி, பிடாரி தெற்கு வீதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பஸ் நிலையம், கடைவீதி, கீழ தென்பாதி, கற்பகம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல் அரசூர் துணை மின் நிலையத்திலிருந்து பெரம்பூர் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் பெரம்பூர், குன்னம், கோபாலசமுத்திரம் ,பட்டிய மேடு, சென்னியநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும், ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்திலிருந்து துளசேந்திரபுரம் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கண்ணாங்குளம், புத்தூர் பாலிடெக்னிக், புத்தூர், மாதாணம் சாலை, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது .இந்த தகவலினை உதவி செயற் பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருவெண்காடு
சீர்காழி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் விஜய பாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவெண்காடு 110 கிலோ வாட் மின் வழி பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காத்திருப்பு, பாக சாலை, தொக்கலாகுடி, திருக்காட்டுப்பள்ளி, நாங்கூர், அண்ணன் பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடமணல் 110 கிலோ வாட் மின் வழி பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், தொடுவாய், வேட்டங்குடி, எடமணல், கூழையாறு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
திருக்கடையூர், மேமாத்தூர்
கிடாரங்கொண்டான்,பொறையாறு, மேமாத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பருவகால பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு கிடாரங்கொண்டான் துணை மின் நிலையம் பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் கருவிழுந்தநாதபுரம், என்.பி.சாவடி, மேலப்பெரும்பள்ளம், கரைமேடு, குரங்குபுத்தூர், தலைச்சங்காடு, மாமாகுடி, கிடங்கல், மருதம்பள்ளம் ,சின்னங்குடி. அதேபோல் பொறையாறு துணை மின் நிலையம் பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் சமத்துவபுரம், காட்டுச்சேரி, காராம்பள்ளம், ஆயப்பாடி ,திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர், பாலூர், தேவனூர், அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், சிங்கனோடை, பத்துகட்டு, திருக்கடையூர், பிச்சகட்டளை, அபிஷேககட்டளை, திருமெய்ஞானம், பி.பி.நல்லூர், வேப்பஞ்சேரி, தாழம்பேட்டை. அதேபோல் மேமாத்தூர் துணை மின் நிலையம் பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் கீழ்மாத்தூரில் ஒரு சில பகுதிகளான வாழ்க்கை, வல்லம், பழைய திருச்சம்பள்ளி, பெரிய மடப்புரம், ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.