< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்காசி மாவட்டத்திற்கு வரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை.!
|24 July 2023 4:21 PM IST
தென்காசி மாவட்டத்திற்கு வரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்திற்கு வரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசு பொதுத்தேர்வு ஏதும் இருப்பின், தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 19ந்தேதி சனிக்கிழமையை பணி நாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.