< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மாநில செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Nov 2022 9:07 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை,

புராணங்களின்படி கங்காதேவிக்கு துலா மாதமான ஐப்பசியில் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் வரம் அளித்ததாகவும், அதன்படி கங்காதேவி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்