< Back
மாநில செய்திகள்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.27¾ லட்சம் கடன் தள்ளுபடி ஆணை
சிவகங்கை
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.27¾ லட்சம் கடன் தள்ளுபடி ஆணை

தினத்தந்தி
|
15 March 2023 12:15 AM IST

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.27¾ லட்சம் கடன் தள்ளுபடி ஆணை வழங்கப்பட்டது

சிங்கம்புணரி, மார்ச்,15-

சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி கடந்த 2021-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி சிங்கம்புணரியில் செயல்படும் பசும்பொன், புகழ், சமுத்திரம், தாமரை ஆகிய நான்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.27 லட்சத்து 89 ஆயிரம் 784 கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான ஆணையை சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார்.. பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, துணைத் தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி ஆணையை அந்தந்த குழு தலைவர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக ஒருங்கிணைப்பாளர் வாணி, பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் ராஜசேகர், அழகர்சாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். கடன் தள்ளுபடி ஆணை பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவருக்கும் செயல் அலுவலருக்கும் துணைத்தலைவருக்கும் மன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்