< Back
மாநில செய்திகள்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி
அரியலூர்
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி

தினத்தந்தி
|
30 Dec 2022 1:10 AM IST

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடந்த அரசு விழாவில் மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி, அதனை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ரமணசரஸ்வதி, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் 617 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 8 ஆயிரத்து 707 உறுப்பினர்களுக்கு ரூ.28 கோடியே 17 லட்சம் மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்