< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி
|5 July 2023 11:38 PM IST
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதாரத்தில் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இதில், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராசா, தனித்துணை கலெக்டர் சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளப்பட்டி இந்தியன் வங்கி மேலாளர் வாலண்டினா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.