< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன்
சிவகங்கை
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன்

தினத்தந்தி
|
4 Sept 2022 11:13 PM IST

விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட உள்ளது.

சிவகங்கை,

கூட்டுறவு இணை பதிவாளர் ஜீனு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்பு காரியங்களுக்கு நடைமுறை மூலதன செலவினங்களுக்காக (வளர்ப்பு செலவினங்கள்) ஓர் ஆண்டு தவணையில் வட்டியில்லா கடன்கள் வழங்கி வருகின்றது. பால்மாடு வளர்ப்பிற்கு தலா ஒரு மாட்டிற்கு ரூ.14 ஆயிரம் வீதமும், ஆடு வளர்ப்பிற்கு ரூ.18 ஆயிரம் வீதமும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை அடமானம் ஏதும் இன்றி வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது. இக்கடன்களை ஓர்ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் அக்கடனுக்கான வட்டி தமிழக அரசால் வழங்கப்படும். தவணை தவறி செலுத்தும் பட்சத்தில் இக்கடனுக்கான 7 சதவீதம் வட்டியுடன் அபராத வட்டியும் சோ்த்து செலுத்த வேண்டும். எனவே கடன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை தொடா்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்