< Back
மாநில செய்திகள்
தொழில்முனைவோருக்கு ரூ.1½ கோடி கடன் உதவி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தொழில்முனைவோருக்கு ரூ.1½ கோடி கடன் உதவி

தினத்தந்தி
|
14 Aug 2022 10:29 PM IST

தொழில்முனைவோருக்கு ரூ.1½ கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.


தொழில்முனைவோருக்கு ரூ.1½ கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

கடன் உதவி

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தொழிற் சாலை களுக்கு கடனுதவி வழங்கி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.

மேலும் தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் தொடர்பான விளக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற துணையாக உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 17.8.22 முதல் 2.9.22 வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

சலுகை

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1½ கோடி வரை வழங்கப்படும். இந்த முகாமில் பொது கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்