< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை உயர்வு
|4 Jun 2022 12:15 AM IST
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையம், நஞ்சைபுகழூர், பாலத்துறை, திருகாடுதுறை, நொய்யல்தளவாப்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், மலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஏராளமானோர் தங்களது வயலில்களில் வாழைக்கன்றுகள் பயிர் செய்தனர். பின்னர் வாழைத்தார்கள் விளைந்ததும் அதனை பறித்து பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ஏலமார்க்கெட்டுக்கு விற்பனைக்காக ெசல்கின்றனர். கடந்தவாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொத்தன் வாழைத்தார்கள் ரூ.300-க்கும் விற்பனையானது. தற்போது பூவன் வாழைத்தார் ரூ.550-க்கும், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொத்தன் வாழைத்தார் ரூ.420-க்கு விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.