< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து சிறுமி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பாம்பு கடித்து சிறுமி பலி

தினத்தந்தி
|
26 July 2022 11:20 AM IST

சோழவரம் அருகே பாம்பு கடித்து சிறுமி பலியானார்.

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு பாண்டிச்சேரி மாநிலத்தை சார்ந்த முத்துராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முத்துராமன் மகள் வைஷ்ணவி (வயது 8) செங்கல் சூளையின் பின்புறம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்து உள்ளது. உடனே அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்