< Back
மாநில செய்திகள்
சிறுமி, 2½ வயது ஆண் குழந்தைக்கு  பாலியல் தொல்லை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சிறுமி, 2½ வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
19 May 2022 9:52 PM IST

குளச்சல் அருகே சிறுமி மற்றும் 2½ வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வழக்குகளில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குளச்சல்:

குளச்சல் அருகே சிறுமி மற்றும் 2½ வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வழக்குகளில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சிறுமிக்கு பாலியல் தொல்லை

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியை சேர்ந்தவர் சஜின் ரோஜர் (வயது21). ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது உறவினர் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

மேலும், அந்த சிறுமியை உறவினர்கள் ஜாக்குலின், சுபி ஆகியோரும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

இந்த சம்பவங்கள் குறித்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சஜின் ரோஜரை கைது செய்தார். மேலும், உறவினர்கள் ஜாக்குலின், சுபி ஆகியோர் மீது சிறுமியை கொடுமை படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம்

திங்கள்நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் 2-வது பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். அந்த பெண்ணின் 2½ வயது ஆண் குழந்தையை பக்கத்து வீட்டை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் மாடிக்கு விளையாடுவதற்காக தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து குழந்தையின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பக்கத்து வீட்டு மாணவனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்