< Back
மாநில செய்திகள்
திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி
மாநில செய்திகள்

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி

தினத்தந்தி
|
24 April 2023 11:38 AM IST

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது.

ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது" என்று கூறினார்.

திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்