< Back
மாநில செய்திகள்
சாராயம் விற்றவர் கைது; 11 லிட்டர் பறிமுதல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சாராயம் விற்றவர் கைது; 11 லிட்டர் பறிமுதல்

தினத்தந்தி
|
29 Jun 2023 12:30 AM IST

சாராயம் விற்றவர் கைது; 11 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலங்குடி அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணமேல்குடி நாட்டாணி கண்மாயில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முருகேசன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 11 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.3 ஆயிரத்து 90 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட முருகேசன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டதையும் தனிப்படை போலீசார் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்