< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் மது கடத்தல்
திருவாரூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மது கடத்தல்

தினத்தந்தி
|
2 Oct 2023 12:15 AM IST

பேரளம் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்தியதில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்னிலம்:

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் வேல் தேவி தலைமையில் பேரளம் அருகே உள்ள வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து வந்த பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த இரண்டு பேர் மதுபான பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 38), ஈரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (60)என்பதும் அவர்கள் 2 பேரிடம் தலா 10 மது பாட்டில் இருந்ததும் தெரிய வந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்த போது அதில் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் பேரளம் பகுதியை சேர்ந்த சிவா(38) அவரிடம் 3 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்ததும், மற்றொரு வாகனத்தில் வந்தவர் முடிகொண்டான் பகுதியை சேர்ந்த தினேஷ் (24) அவரிடம் 10 மது பாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சாராயம், மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்