< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
|19 Oct 2023 12:15 AM IST
பண்ருட்டியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த கண்ணன் மகன் விமல்ராஜ்(வயது 39) என்பதும், புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விமல்ராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 30 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.