< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதிக்க வேண்டும் -ஐகோர்ட்டில் மனு
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதிக்க வேண்டும் -ஐகோர்ட்டில் மனு

தினத்தந்தி
|
21 July 2024 8:29 PM IST

சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

டாஸ்மாக்–க்குப் பதிலாக, சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக மதுபான விற்பனை மேற்கொள்ள அனுமதிக்க கோரியும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், டாஸ்மாக்–குக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதாகவும், இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்கள் மட்டுமே விற்கப்படுகிறது.

மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும். கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்