< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
மதுபான கடைகள் 2 நாட்கள் மூடல்
|26 Sept 2023 12:15 AM IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுபான கடைகள் 2 நாட்கள் மூட உத்தரவு.
வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி தினம் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் விற்பனை இல்லாத நாட்களாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருகிற 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி ஆகிய நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடிவைக்கப்பட வேண்டும், மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது, மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.