< Back
மாநில செய்திகள்
2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

தினத்தந்தி
|
27 Sept 2023 12:15 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்

சிவகங்கை

நாளை(வியாழக்கிழமை) மிலாடிநபி மற்றும் அக்டோபர் 2-ந்்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்களை மேற்படி குறிப்பிடப்பட்ட தினங்களில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் உரிமம் பெற்ற கிளப், ஓட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை மற்றும் 2-ந் தேதி முழுவதுமாக மூடப்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்