< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
மதுவிற்ற பெண் உள்பட 3 பேர் சிக்கினர்
|6 Sept 2023 3:09 AM IST
மதுவிற்ற பெண் உள்பட 3 பேர் சிக்கினர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு அன்னை சத்யா நகரில் மது விற்றதாக செல்வம் என்பவரின் மனைவி சிவகாமி (வயது 42), ஈரோடு சோலார் பகுதியில் மது விற்றதாக சூரம்பட்டி காமராஜ் 4-வது வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (37), சென்னிமலையில் மது விற்றதாக சென்னிமலை ராசாம்பாளையத்தை சேர்ந்த பூபதி (41) ஆகியோரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.