< Back
மாநில செய்திகள்
சிவகிரியில் மது விற்றவர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

சிவகிரியில் மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
22 Oct 2023 12:15 AM IST

சிவகிரியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி:

சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் சிவகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஜனை மடத்து தெருவை சேர்ந்த காளை மகன் மருதுபாண்டியன் (வயது 32) என்பவர் தனது வீட்டுக்கு அருகில் மதுபாட்டில்களை திறந்து மதுவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கலப்படம் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்