< Back
மாநில செய்திகள்
பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
13 Aug 2023 12:15 AM IST

களியக்காவிளை அருகே பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குழித்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் குழித்துறை சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மடிச்சல் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய திடீா் சோதனையில் அங்கு பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வியாபாரி சுனில்குமாரை (வயது32) போலீசர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்