< Back
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
18 May 2023 11:22 PM IST

ஜோலார்பேட்டை பகுதியில் மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாமலேரிமுத்தூர் ஊராட்சி காந்தி நகர் பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் பின்புறம் முட்புதரில் மறைத்து வைத்து டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தாமலேரிமுத்தூர், காந்திநகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 53) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்