< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
|11 Oct 2023 10:35 PM IST
மது விற்றவர் கைது
கொல்லங்கோடு:
நித்திரவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி தலைமையிலான போலீசார் நேற்று நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பருத்திவிளை பகுதியில் சென்றபோது ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரான ராஜேந்திரன் (வயது61) என்பவரை கைது செய்தனர்.