< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
|20 Sept 2023 3:13 AM IST
வள்ளியூரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர்-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மடப்புரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து, அவர் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தபோது அதில் 6 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் மடப்புரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (39) என்பதும், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.