< Back
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
19 Sept 2023 12:15 AM IST

மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை:

தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் பேச்சுமுத்து பாண்டி மற்றும் போலீசார் நேற்று காலையில் தக்கலை அருகே உள்ள பாறைக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (வயது45) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரன்சை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்கள், ரூ.1,500 பணம் மற்றும் மோட்டா சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்