< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
|28 Aug 2023 12:15 AM IST
மது விற்றவர் கைது
நாகர்கோவில்:
நாகர்ேகாவில் வடசேரி போலீசார் நேற்று காலையில் நாடான் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சைக்கிளில் ஒருவர் பையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் வாத்தியார்விளையை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பதும், நாடான்குளம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 37 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.