< Back
மாநில செய்திகள்
குளச்சல் அருகே மது விற்றவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குளச்சல் அருகே மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
23 Aug 2023 10:53 PM IST

குளச்சல் அருேக மது விற்றவர் ைகது ெசய்யப்பட்டார்.

குளச்சல்:

குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் நேற்று குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். லட்சுமிபுரம் சந்திப்பில் செல்லும்போது அப்பகுதியில் ஒரு வீட்டில் மதுபானம் விற்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட 7 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, மது விற்ற ஜெகன்சிங் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்