< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
|18 July 2023 1:43 AM IST
திசையன்விளையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை - நவ்வலடி ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டு பகுதியில் அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துகொண்டிருந்த திசையன்விளை மன்னர் ராஜா கோவில்தெருவை சேர்ந்த ஆறுமுகபாண்டி (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.