< Back
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
8 July 2023 12:15 AM IST

மது விற்றவர் கைது

திருவட்டார்:

திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் செறுகோல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த பையில் 14 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் காட்டாத்துறை ஈச்சன்விளையை சேர்ந்த பன்னீர்செல்வம்(வயது 55) என்பதும், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 14 மது பாட்டில்கள் மற்றும் விற்பனை செய்த ரூ.1400 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்