< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
|8 July 2023 12:15 AM IST
சிவகிரி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சிவகிரி அருகே வடுகப்பட்டி, தெற்கு சத்திரம், ராயகிரி, போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயகிரிக்கு வடபுறம் கணபதியாற்று பாலம் அருகே மதுபாட்டில்கள் விற்றவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில், ராயகிரி காந்தி தெருவை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காளியப்பன் (வயது 43) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே குற்றப்பிரிவு சம்பந்தமான பழைய வழக்குகள் இருப்பதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.