< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளியையொட்டி கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை
|13 Nov 2023 11:21 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிக அளவில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. நவம்பர் 11-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-
மதுரை - ரூ.52.73 கோடி,
சென்னை - ரூ.48.12 கோடி
கோவை - ரூ.40.20 கோடி
திருச்சி - ரூ.40.02 கோடி-
சேலம் - ரூ.39.78 கோடி
நவம்பர் 12-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-
திருச்சி - ரூ.55.60
சென்னை - ரூ.52.98
மதுரை - ரூ.51.97 கோடி
சேலம் - ரூ.46.62 கோடி
கோவை - ரூ.39.61 கோடி